நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..! போலீசை சரமாரியாக வெட்டிய கைதி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்
ராமநாதபுரம் நீதிமன்றத்தால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கைது செய்ய வந்த போலீசாரை போக்சோ குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் சோனைமுத்தனிடம் கேட்கலாம்...
இராமநாதபுரம் நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட போக்சோ குற்றவாளியை கைது செய்யச் சென்ற போலீசாரை குற்றவாளி அறிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த வாலிநோக்கம் காவல் நிலைய காவலர் காளிமுத்து என்பவர் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிடிக்கச் சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவரை கைது செய்யச் சென்ற வாலிநோக்கம் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு காவலர்களுடன் சேர்ந்து சென்ற காளிமுத்து என்பவரை அசோக் அறிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து போலிசார் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது