தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் அவலம்...இடுகாட்டிற்கு முறையான சாலை அமைக்க கோரிக்கை
திண்டுக்கல் அருகே, இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முறையான சாலை வசதி இல்லாததால், நீரோடையில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் அவல நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் இடுகாட்டிற்கு செல்லக்கூடிய பாதை முழுவதும் முட்கள் நிறைந்தும், மழை காலங்களில் தண்ணீர் நிரம்பியும் காணப்படுகிறது. இதனால் முறையான பாதை அமைத்து தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.