பணத்தை டெபாசிட் செய்ய சென்ற நபர். லட்சணக்கான பணத்தை பறித்து ஓடிய கும்பல்

Update: 2023-08-04 16:58 GMT

சென்னை வண்ணாரப்பேட்டையில், வங்கி இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வடசென்னை பகுதியை சேர்ந்த சாதீக் என்பவர், 8 லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் இயந்திரத்தில் செலுத்த தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகாரில் கொசு கர்ணா, கருக்கா வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்