தந்தையை திட்டிய நபர்..! மகன் செய்த கொடூர சம்பவம்.. ஷாக்கான போலீஸ்... திருப்பூரில் அதிர்ச்சி..!

Update: 2023-09-09 15:30 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த வேலாயுதம் பாளையத்தில் வசித்து வந்தவர் யுவராஜ். தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்து, தனியே வசித்து வந்த இவர், திடீரென வீட்டினுள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், 10 வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுவன் ஒருவன், போலீசில் சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், தனது தந்தைக்கும் யுவராஜூக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், இதில் தனது தந்தையை யுவராஜ் அவதூறாக பேசியதால் அவரை கழுத்தறுத்து கொன்றதாக சிறுவன் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனை பிடித்து கோவை சீர்திருத்த பள்ளியில் அடைத்த போலீசார், சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்