உதவித்தொகை கேட்ட முதியவர் - தானே போனில் பேசி கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
ஈரோட்டை சேர்ந்த முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளியான முதியவர் பிச்சையா என்பவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் நேரடியாக பேசினார். முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளியான 63 வயதான ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த முதியவர் பிச்சையாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் அழைத்து பேசினார். இது மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக முதியவர் பிச்சையா கூறியுள்ளார். தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு தனக்கு முதியோர் தொகை வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி என பிச்சையா கூறினார்.