முதல்வருக்கு இலங்கை அமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கை.. மீனவர் பிரச்சினை முடிவுக்கு வருமா?

Update: 2023-07-30 01:57 GMT

இலங்கையில் தமிழர்களின் மேம்பாட்டுக்காக, தமிழக அரசின் பங்களிப்பு அவசியம் என்று, முதலமைச்சர் ஸ்டாலினிடம் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தந்தார். முதலமைச்சர் ஸ்டாலினும், ஜீவன் தொண்டமானும் கலந்துரையாடினர். அப்போது, கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது, தமிழக அரசு செய்த உதவிக்காக, இலங்கை மக்கள் சார்பில் நன்றியை ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், மலையகம் - 200 விழா, மலையக கல்வி அபிவிருத்தி, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலினும், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்