புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய லோன் ஆப்...மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை...

Update: 2023-07-26 16:03 GMT

திருவாரூர் , ஏரிவேலூர்

கடனை அடைத்த பிறகும் பணம் கேட்டு மிரட்டல்...

ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை...

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய லோன் ஆப்...

மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை...

இந்த லிங்க கிளிக் பண்ணுங்க… உடனே உங்களோட அக்கவுண்டுக்கு பணத்த அனுப்புறோம்ன்னு சொன்னா… மறந்துகூட லிங்க கிளிக் பண்ணிடாதீங்க… அப்படி கிளிக் பண்ணி ஆன்லைன்ல கடன் வாங்குன ஒரு இளைஞர் இன்னைக்கு உயிரோட இல்ல.

பேங்க்கில் லோன் பெற்ற காலம் மாற ஆத்திர அவசரத்திற்கு நமக்கு தேவைப்படும் குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் ஆப்களில் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வசதிகளும் வந்துவிட்டது.

ஆனால், எல்லா நேரங்களிலும் இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளை நாம் முழுமையாக நம்பிட முடியாது… அதுவே ஒருகட்டத்தில் உயிருக்கு எமனாக மாறிவிடுகின்றன…

ஆம், ஆன்லைன் வளைதளத்தில் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் சைபர் கொள்ளையர்களிடம் சிக்கி இன்று தன் உயிரையே மாய்த்துகொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ளது ஏரி வேலூர் கிராமம். இதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். 27 வயதாகிறது. கும்பகோணத்திலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். ராஜேஷிற்கு இன்னும் திருமணமாகவில்லை…

தன்னுடைய திருமணத்தை தன் செலவிலேயே நடத்தவேண்டும் என்பது தான் ராஜேஷின் குறிக்கோள். ஆனால், ராஜேஷின் மாத வருமானம் குடும்பச் செலவிற்கே கரைந்திருக்கிறது. மாதக் கடைசியில் கையில் பணம் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அப்போதுதான் ராஜேஷ் கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் மூலம் மூன்றாயிரம் நான்காயிரம் என சிறுசிறு கடனாக பெற்று செலவுகளை கவனித்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில்தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தம் ராஜேஷூக்கு ஏற்பட்டிருக்கிறது.

அப்போதுதான் இன்ஸ்டாகிராமில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக கொடுக்கப்பட்டிருந்த விளம்பரத்தை ராஜேஷ் பார்த்திருக்கிறார். மேற்கொண்டு அதில் இணைக்கப்பட்டிருந்த லிங்க்கையும் கிளிக் செய்திருக்கிறார். அந்த லிங்க் ஒரு வளைதள பக்கத்துக்கு அவரை இட்டு சென்றிருக்கிறது.

அந்த வெப் பேஜில் பேன் கார்ட் நம்பர், ஆதார் கார்ட் நம்பர், புகைப்படம், போன்ற ஆவணங்களை பதிவு செய்துவிட்டு வீடியோ கால் மூலம் அந்த ஆவணங்களை உறுதி செய்திருக்கிறார் ராஜேஷ்.

அதற்குபிறகு ராஜேஷின் வங்கி கணக்கில் மூன்றாயிரம் ரூபாய் பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு இருந்து தான் ராஜேஷிற்கு பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. வாங்கிய கடனுக்கு ராஜேஷ் வட்டி கட்டாமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.

ஒரு வருடம் ஆகியிருக்கிறது. வட்டி குட்டி போட்டு 2000 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. ராஜேஷின் சிபில் ஸ்கோரும் முடகப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வட்டியோடு அசலையும் சேர்த்து கட்டி கடனை அடைத்திருக்கிறார் ராஜேஷ்.

ஆனால் அதன் பிறகும் மேற்கொண்டு பணம் கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ராஜேஷின் புகைப்படத்தையும் வீடியோவையும் ஆபாசமாக சித்தரித்து சமூகவளைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.

மேலும் அந்த சைபர் கொள்ளையர்கள் ராஜேஷின் செல்போனை முடக்கி அவரின் தனிப்பட்ட விபரங்களையும் திருடியிருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் அவர்களின் ஆபாச மிரட்டல் அதிகரித்திருக்கிறது. இதனால்

மனமுடைந்த ராஜேஷ் பூச்சி மருந்து குடித்து இறந்து போயிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷின் செல்போனை கைப்பற்றிய வலங்கைமான் காவல்துறையினர் சைபர் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்