வாங்கிய வீட்டில் வந்த வினை...எதிர் பாராத கேரளா கும்பலின் மோசடி ...

Update: 2023-07-29 05:16 GMT

நீலகிரி அருகே 15 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விற்ற நபர்கள், தற்போது வீட்டை பூட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - தெய்வநாயகி தம்பதியினர், 15 ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சேர்ந்த மேத்யூ என்பவரிடம் வீடு ஒன்றை வாங்கி, அதில் வசித்து வந்துள்ளனர். தற்போது கிருஷ்ணமூர்த்தியின் உடல்நிலை காரணமாக, அத்தம்பதியினர் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்தநிலையில் மேத்யூ தலைமையிலான கும்பல் ஒன்று, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டை வேறோரு பூட்டால் பூட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூடலூர் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், வீட்டை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்