குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம்..தேசிய மனித உரிமைகள் ஆணையம் | Chennai

Update: 2023-12-13 04:15 GMT

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு, டிசம்பர் 5-ஆம் தேதி குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் மிக்ஜாம் புயலால் பெருமழை பெய்ததால் மருத்துவமனை செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல், ஆட்டோவில் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், மருத்துவமனை பூட்டப்பட்டிருந்ததால் சிகிச்சை பெற முடியவில்லை. அதற்குள் பிறந்த சிசு இறந்து போயிருந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் சென்றபோது, தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்