பேட்டரி திருடன் சொன்ன தகவல்.. எலும்பு கூடை பார்த்து அதிர்ந்த போலீஸ்.. பிண்ணனியில் பகீர் கொலை
பேட்டரி திருடன் சொன்ன தகவல்.. எலும்பு கூடை பார்த்து அதிர்ந்த போலீஸ்.. பிண்ணனியில் பகீர் கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெண் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்ற இளைஞரை, கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஒடிசாவை சேர்ந்த அஜித்குமாரை, கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் சடலத்தை வீசியதாக கூறி போலீசாரை திகைக்க வைத்தார்.
நண்பரான லெவினின் காதலியிடம், அஜித்குமார் தகாத முறையில் நடந்துக் கொண்டதால், மது வாங்கிக் கொடுத்து மதுபாட்டிலால் தாக்கியும், கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து எலும்புக்கூடாக இருந்த அஜித்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக உள்ள லெவினையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.