எண்ணூரில், கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்...அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதி மீனவர்கள் கோரமண்டல் உரத்தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைக்கூட கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ கிராம மக்களுக்கு சுற்றுவட்டார கிராம நிர்வாகிகள் ஆதரவு அளித்துள்ளனர்.