மனைவியை கதற கதற கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. புதுக்கோட்டையில் பயங்கர சம்பவம் | Pudukkottai
அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், காமாட்சி தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் குடிபோதையில் பால்ராஜ், மனைவி காமாட்சி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமையன்று மது போதையில் தகராறு செய்த பால்ராஜ், கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த காமாட்சி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தானும் அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவம் தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.