ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் கொட்டிய கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடம்பூர் செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் வந்த மலை கிராம மக்கள், காட்டாற்றை கடக்க முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மக்கள் காட்டாற்றை கடந்து சென்றனர்.