மாநகராட்சி தொழுவத்தில் நுழைந்து அத்துமீறல் - மாடுகளை மீட்டு சென்ற கும்பல்
சென்னையை அடுத்த ஆவடியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக
சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து திருமுல்லைவாயலில் உள்ள அரசு தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளனர். அபராதம் செலுத்தும் உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
ஆவடி மாநகராட்சி தொழுவத்தில் அத்துமீறி நுழைந்து,
சுகாதார ஆய்வாளரை மிரட்டி மாடுகள், கன்றுக்குட்டிகளை ஒரு கும்பல் மீட்டு சென்றுள்ளது. இது குறித்து சுகாதார ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் மாடுகளை பிடித்து சென்றவர்களை
போலீசார் தேடி வருகின்றனர்.