"நாங்குநேரி மாணவரை வெட்டிய மாணவரின் தந்தை பாஜகவின் தீவிர உறுப்பினர்" - அண்ணாமலைக்கு பதிலடி

Update: 2023-08-15 07:39 GMT

மாணவர் வெட்டப்பட்ட விவகாரத்தில் கைதான மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் என்று, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் பதில் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என,

பொய்யான குற்றச்சாட்டை அண்ணாமலை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் காவல் துறையால் கைது செய்யப் பட்ட மாணவரின் தந்தை பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்து வருவதாகவும், அவர் நாங்குநேரியில் வார்டு தலைவராகவும் பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்தது என்றும், ஆனால் இதை யெல்லாம் மறைத்து விட்டு திமுகவிற்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாக ஆவுடையப்பன் குற்றம்சாட்டியுள்ளார். இனிமேல் அண்ணாமலை ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்