திடீரென ரயிலின் மீது மோதிய பசுவால் கோளாறான இன்ஜின்..தஞ்சை அருகே அதிர்ச்சி

Update: 2023-08-04 06:59 GMT

பாபநாசம் அருகே பசுமாட்டின் மீது மோதி, ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி வழக்கமான பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாபநாசம் ரயில்நிலையம் அருகே ரயிலின் குறுக்கே திடீரென பசுமாடு ஒன்று புகுந்தது. பசுமாட்டின் மீது ரயில் மோதி, சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, கும்பகோணத்தில் இருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு, 2 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகிய நிலையில், கும்பகோணம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்

Uploaded On 04.08.2023

Tags:    

மேலும் செய்திகள்