540 கிராம் எடையில் பிறந்த குழந்தை..பயிற்சி அளித்த மருத்துவர்கள் - மீண்டு வந்த பிஞ்சு குழந்தை
நாகையில், எடை குறைவாக பிறந்த பச்சிளம் குழந்தையை சிறப்பாக பராமரித்த மருத்துவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். கீழ்வேளூர் கோகூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா-முருகதாஸ் தம்பதியருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி, நாகை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. உடல் எடை 540 கிராம் இருந்ததால் சிறப்பு பிரிவில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். மேலும், தாய்ப்பாலை பாலாடை மூலம் குடிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயிற்சி அளித்தனர். இதன் பயனாக, 3 மாதங்களுக்குப்பின் குழந்தையின் எடை 1 கிலோ 500 கிராமை எட்டியது. இதற்காக மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டினார்.