பழனி கோயிலில் மிராஸ் பண்டாரங்களை, உதவி ஆணையர் தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி, பண்டாரங்கள் பணிகளை புறக்கணிப்பில் ஈட்பட்டனர். மலைக்கோயிலில் உள்ள 64 திருமஞ்சன பண்டாரங்கள், வரட்டாறு புனித நீரை ஆறு கால பூஜைக்கு தலையில் சுமந்து படிப்பாதை வழியாக கொண்டு சென்று அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில், பண்டாரங்கள் கொள்ளை அடிப்பதாக உதவி ஆணையர் லட்சுமி கூறி தரக்குறைவாக பேசுவதாக பண்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பணிக்கு அனுமதி மறுத்து வேறு ஆட்களை நியமித்துக்கொள்கிறோம் என்றும் அவர் கூறுவதாக குற்றம் சாட்டி, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.