நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் விழாவிற்கு வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றில் சாய்ந்து 10 வயது சிறுவன் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்ட பேனர் பலத்த காற்று வீசியதால் சாய்ந்தது... அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் விழுந்தது. ஆனால் அங்கு ஒரு இருசக்கர வாகனம் நின்றிருந்ததால் பேனர் முழுமையாக சிறுவன் மீது விழவில்லை... அதனால் நல்வாய்ப்பாக சிறுவன் காயமின்றி தப்பினார்... பேனரை முன்னரே அகற்றி இருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என குற்றம் சாட்டப்படும் நிலையில் இச்சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்.