புதுச்சேரியில் சாராயக் கடைக்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் | Puducherry | Thanthitv
புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள ஏரியை ஆய்வு செய்ய சென்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த ஆய்வின்போது, அமைச்சர் சாய் சரவணன், பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆகியோர் துணைநிலை ஆளுநருடன் இருந்தனர்.