பழனி கோயிலின் அடையாளமாக திகழ்ந்த 90 ஆண்டு கால ஹோட்டல் அகற்றம்..? பெரும் பரபரப்பு

Update: 2024-08-04 06:42 GMT

பழனி மலைக்கோயிலில் 90 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய உணவகத்தை கோயில் நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக புகார் எழுந்துள்ளது. தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைமேல் பிரகாரத்தில் வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்த உணவகத்தை கடந்த 1994ஆம் ஆண்டு காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஒப்பந்ததாரர் தொடர்ந்த வழக்கில் கடையை காலி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், கோயில் அதிகாரிகள் கடைகளில் உள்ள பொருட்களை எந்தவித முன்னறிவிப்பின்றி எடுத்துச் சென்றதாக கூறி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்