"கோவையில் சட்டரீதியாக நடவடிக்கை..." உறுதியாக சொன்ன அமைச்சர்

Update: 2024-09-04 09:33 GMT

கோவையில் யானை வழித்தடத்தில் உள்ள கல்லாறு பழ பண்ணை அகற்றும் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, விவசாயம், மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், யானைகள் வழித்தடத்தில் பழ பண்ணை எடுக்கப்படும் விவகாரத்தில் அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்