மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 95 லட்சம் ரூபாய் செலவு செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த உச்சவரம்பை மீறி மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், தற்போதைய நிலையில், மனுதாரரின் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்