தரிசு நிலத்தில் தரமான செயல் செய்த விவசாயி.. நேரில் பார்த்து வியந்த கலெக்டர்

Update: 2024-09-27 12:16 GMT

வாணியம்பாடி அருகே பூங்குளத்தில், 20 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருந்த 34 ஏக்கர் நிலங்களாக மாற்றப்பட்டு, வேர்கடலை பயிரிட்டுள்ளதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ், 25 சிறுகுறு விவசாயிகள் இணைந்து குழுவாக இதனை செயல்படுத்தியதாக தெரிவித்தார். கூலி வேலைக்கு சென்ற நில உரிமையாளர்கள், இப்போது கண்ணியமான பொருளாதார நிலையை எட்டியிருப்பதே இந்த திட்டத்தின் வெற்றி என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்