``ஆளுநர் RN ரவி பதவி விலக வேண்டும் அல்லது..'' - ஒற்றை அறிக்கையில் விளாசிய திருமா
தமிழக ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநர் விதித்த தடைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றது திமுக அரசுக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்த திருமாவளவன், பொன்முடிக்கும், முதல்வருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ஆளுநர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசையைப் போல் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுவது தான் முறை என்று சாடியுள்ளார்...