தருமபுரியில் பிரம்மாண்ட பொங்கல் விழா | ஒன்று கூடிய 400 குடும்பத்தினர் | ஊரெங்கும் வீசிய பொங்கல் மணம்

Update: 2024-01-16 15:48 GMT

தருமபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் முன் ஒன்று கூடிய 400 குடும்பத்தினர் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜைக்கு பிறகு, பொங்கல் பானைகள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர், புது பானையில் பச்சரியிட்டு பொங்கல் சமைத்த பெண்கள், அதனை அம்மனுக்கு படையலிட்டனர். இதைதொடர்ந்து, படைவீட்டம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்