பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசி கொன்ற தாய் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மணி ராஜ் - ராஜேஸ்வரி. தம்பதிக்கு 3 வயதில் ராதிகா என்ற குழந்தை உள்ள நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்நிலையில், தனது தாய் வீட்டில் வசித்து வந்த ராஜேஸ்வரி, சில நாள்களுக்கு முன், தன் ஐந்து மாத கை குழந்தையை கணவர் கடத்தி சென்றதாக போலீசில் புகாரளித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் காதில் சீழ் வடிந்ததால், அதற்கு ராஜேஸ்வரி மருந்து போட்ட நிலையில், இதில் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி இருக்கிறது. உடனே, குழந்தை இறந்து விட்டதாக எண்ணி பயந்து போன ராஜேஸ்வரி, அருகில் உள்ள கால்வாயில் குழந்தையை வீசி கொன்று நாடகமாடியது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், ராஜேஸ்வரி மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.