மண்ணை தோண்டியவுடன் கிடைத்த தங்கம்... விசாரணையில் வெளியான ஷாக்கிங் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் ஏரிக்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணிப்பேட்டையை சேர்ந்த ஏழுமலை என்பவர் தன் மகன் சக்திவேலுடன் சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் வந்ததால் அவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சக்திவேல் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் இருந்து 4 சவரன் நெக்லஸ் மற்றும் இரண்டரை சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், இருவரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடு மற்றும் கோயில்களில் தந்தையும் மகனும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. மேலும், திருடிய நகைகளை ராணிப்பேட்டை பாலாற்றுப் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பையில் வைத்து புதைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல், வேறு சில இடங்களிலும் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக இருவரும் வாக்குமூலம் அளித்த நிலையில், இருவரையும் நேரில் அழைத்து சென்று 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தந்தையையும் மகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, திருட்டிற்கு உடந்தையாக இருந்த பாபா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.