கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம் பி., வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாகர்கோயிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் பிரின்ஸ் நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் சென்றனர். முன்னதாக, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ, விஜய் வசந்த், டெரிக் சந்திப்பில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.