ஆபாச வீடியோ விவகாரம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-06-10 14:10 GMT

ஆபாச வீடியோ விவகாரம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பா.ஜ.க.வின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2வது நபரான, தலைமறைவாக உள்ள தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில், முன்ஜாமின் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி மாயகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்