சென்னையில் ஒன்றுகூடிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் - அரசுக்கு முக்கிய கோரிக்கை
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை அம்பத்தூரில் அச்சங்கத்தின் சிறப்பு தலைவரும், சட்ட ஆலோசகரமான பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். டாஸ்மாக் விற்பனையாளர்களாக 20 வருடங்கள் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரியும், விற்பனையாளர்களுக்கு குறைந்தது 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும், வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.