கிளம்பிய கடும் எதிர்ப்பு - அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-03-22 13:55 GMT

பிரபல இசைக்கலைஞர் கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது தருவதற்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் இசைக் கலைஞர்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... 9 தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் கோயிலாக கருதப்படும் மியூசிக் அகாடமி பிரிவினைவாத சக்திகளால் சிதைந்து விடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்... மியூசிக் அகாடமியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ள இசைக் கலைஞர்கள் உடன் தமிழ்நாடு பாஜக துணை நிற்கும் என்றும், வெறுப்பு, நீர்த்துப்போன பிரசாரம் மற்றும் பிரிவினைவாத சித்தாந்த ஆதரவாளர்களின் புகலிடமாக கர்நாடாக இசைக் கோயில் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்