சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண்

Update: 2024-06-25 14:54 GMT

பாபநாசம் அருகே சில்லறை இல்லை என கூறி கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பாதி தூரம் சென்றவுடன், 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லரை இல்லை என கூறி கண்டக்டர் பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளார். பசுபதிகோவில் என்ற இடத்தில் இறக்கி விடப்பட்ட அவர், வேறொரு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். கர்ப்பிணியை பாதி வழியில் இறக்கி விட்ட கண்டக்டரை மற்றொரு பெண் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்