"ஏன் அமைச்சர பாக்க போனன்னு அடிக்கிறாங்க.. கொன்றுவாராம்.." - வலி தாங்க முடியாமல் கதறும் கவுன்சிலர்
தென்காசி அருகே உட்கட்சி பூசல் காரணமாக, திமுக கவுன்சிலரை, திமுக நகர செயலாளரின் ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கோட்டையில் நகர திமுக செயலாளரை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலராக வெற்றி பெற்ற இசக்கி துரை என்பவர், பின்னர் திமுகவில் இணைந்ததால் உட்கட்சி பூசல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக, கவுன்சிலர் இசக்கி துரையை, நகர செயலாளரின் ஆதரவாளர்கள் சாவியை வைத்து தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இசக்கி துரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.