நீச்சல் குளத்தில் விளையாடிய குழந்தைக்கு அடுத்த நொடியில் நேர்ந்த கதி | Tenkasi
ரத்தனபுரியைச் சேர்ந்த ராஜேந்திரன் தமது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன், அருகே உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்ப்பாராதவிதமாக ராஜேந்திரனின் 2 வது மகள் கன்சிகா, நீரில் மூழ்கினார். சிறிது நேரம் கழித்தே சிறுமியை உறவினர்கள் கவனித்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிறுமி ஏற்கனவே உயிழிந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.