வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டிய கடையம் யூனியன்
துணை சேர்மனும், திமுக ஒன்றிய செயலாளருமான மகேஷ்
மாயவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பாவூர்சத்திரம் போலீசில் எப்சிபா ராணி என்ற பெண்
புகார் அளித்துள்ளார். அவரது தகப்பனார் மூன்று லட்சம்
ரூபாய் அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக
கூறியுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பெண்ணின் வீட்டிற்கு திமுக நிர்வாகி சென்று பேசும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி
உள்ளது.