கேக் வெட்டியதில் ஆரம்பித்த பிரச்சினை.. காட்டி கொடுத்த வீடியோ.. கைதில் முடிந்த சம்பவம்
தென்காசி அருகே பெரிய கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அரிகர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, அவரின் நண்பர்களுடன் சேர்ந்து பெரிய கத்தியை வைத்து கேக் வெட்டி, அதை வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.