தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. அனுமதி இன்றி இயங்கி வந்த இந்த வாகன காப்பகத்தை மூட கோரி நகராட்சி அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் வழக்கியிருந்தனர். இந்த நிலையில், அதனை மூடி சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது திமுக நகர்மன்ற உறுப்பினர் ராஜா ஆறுமுகத்திற்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைதொடர்ந்து இதில் காயம் அடைந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகன், முத்துமாரியப்பன் உட்பட மூன்று பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதே போல் நகராட்சி ஊழியர்கள் தாக்கியதாக திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது