"சாயந்தரம் ஆனா சரக்கு வேணும்" - முதியவர்களை வைத்து பக்கா பிளான் BackFire-ஆனா பரிதாபம்-அம்பலமான உண்மை
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரங்காபுரத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என கிராம மக்கள் மனு கொடுத்து, பேட்டி அளித்தனர். தமிழகத்தில் மதுக்கடை வேண்டாம் என போராட்டம் நடப்பது வாடிக்கையாக உள்ள நிலையில், தங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.