அமெரிக்க பெண்ணை மணம் முடித்த தஞ்சை வாலிபர் - தமிழ் முறைப்படி நடந்த திருமணம்
நம்மூர்களில் சிலர் ஜாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்தாலும், கடல் கடந்த காதலியான அமெரிக்க பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்திருக்கிறார் தஞ்சை வாலிபர்.
தஞ்சாவூரை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர்,
இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்த அன்னி டிக்சன் என்ற பெண்ணும், இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் பெற்றோர் சம்மதத்துடன்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
தமிழில் வேத மந்திரங்கள் ஓதி, தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நம்மூர்களில் சிலர் ஜாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்தாலும், அமெரிக்க பெண்ணை இளைஞர் மணமுடித்ததை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.