சூறாவளி காற்றுடன் தமிழகத்தின் மேல் நிற்கும் சுழற்சி - சாதா மழை இல்ல.. எதற்கும் தயாரா இருங்க
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இன்று, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மத்தியகிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...