பள்ளிக் கல்வித்துறை எடுத்த முடிவு - மத்திய அரசுக்கு கடிதம்
நவீன பள்ளிகள் திட்டம் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆர்வம்
புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள நவீன பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆர்வமாக இருப்பதாக அறிவித்துள்ளது...
புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும், நவீன பள்ளிகள் தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
பல்வேறு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல் கற்பித்தல் திறன், தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இந்த புதிய பள்ளிகள் அமைய உள்ளன.
அதோடு 14 ஆயிரத்து 500க்கும் அதிகமான பள்ளிகளை மேம்படுத்தவும், இந்த திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆர்வமாக இருப்பதாகவும்,
வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாகவும், மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பி இருக்கிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நவீன பள்ளிகள் திட்டத்திற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.