தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை... எதற்கு அவர்களுக்கு மின்சாரம்... தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்
கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அச்சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நெய்வேலி அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்