மனைவியின் நடத்தையில் சந்தேகம்...போதையில் கணவன் செய்த பயங்கரம்
தாம்பரம் அருகே அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகரைச் சேர்ந்த தம்பதியினர் பிரகாசம் - விசுவாசமேரி.
இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
விசுவாச மேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருவதால் சில சமயங்களில் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார்.
இதனால், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரகாசம் தன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் மதுபோதையில் தன் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல்துறையினர் தலைமறைவான பிரகாசத்தை தேடி வருகின்றனர்.