சென்னையில் பீர் பாட்டிலால் கழுத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்ட இளைஞர் - ரத்தம் சொட்ட சொட்ட கதறிய அதிர்ச்சி காட்சிகள்
போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி தன்னைத்தானே பீர் பாட்டில் மூடியால் குத்திக்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த இளைஞரான ஜோசப், டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, ஜோசப் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டில் மூடியால் தனது கழுத்தில் குத்திக்கொண்டார். கழுத்தில் ரத்தம் வழிய, போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.