தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். நவம்பர் 1ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் ஆய்வில், விதிகளை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன், முகப்பு விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.3 ஆயிரத்து 667 வாகனங்களை சோதனை செய்ததில், 639 வாகனங்கள் விதிகளை மீறி இருப்பது தெரிய வந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களிடம், 36 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.