திருப்பத்தூர் மாவட்டம் தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 31 மாணவர்கள், பல்வேறு காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், குறிப்பிட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர், இடைநின்ற மாணவர்களை தனது காரிலேயே அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர பாண்டியன், மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், இடைநிறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்து வருவதாக குறிப்பிட்டார். மாவட்ட கல்வி நிர்வாகத்தின் சார்பாக அம்மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களது குறைகளை நிவர்த்து செய்து, தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு சென்று படிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.