உணவு வாங்கி தராமல் அலைக்கழித்த பிள்ளைகள் - முதியவர் கண்ணீர் மல்க போலீசிடம் மனு..

Update: 2023-08-12 05:31 GMT

கடலூரில், சாப்பிடுவதற்கு கூட பணம் தராமல் மகனும், மகளும் அலைக்கழிப்பதாக கண்ணீருடன் மனு அளித்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த காவல் கண்காணிப்பாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த எஸ்.பி ராஜாராமிடம், 80 வயது முதியவர் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார். அப்போது, தான் காலையில் சாப்பிடவில்லை என முதியவர் கூறியதையடுத்து, காவலர் சிற்றுண்டியில் எஸ்.பி உணவு வாங்கி கொடுத்தார். தொடர்ந்து, மற்றொரு முதியவர் தனது ஓய்வூதியத்தை எதிர்மனுதாரர் பெற்று தர மறுப்பதாக கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்