போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி, வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஆகஸ்ட் 11ம் தேதியான நேற்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் கூடுதலாக 543 பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 2 ஆயிரத்து 643 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 150 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.