சிறு குறு நிறுவனங்களுக்கான இழப்பீட்டு மானியத்தை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மாநில அரசு வழங்கியுள்ளது...செப்டம்பர் 10ம் தேதி தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்திய நிலையில், கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக தெரிவித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தன. அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு,
மின் பயன்பாட்டை பொருத்து 15ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து அரசாணை வெளியிட்டது.இதனால் 196 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அரசாணையில் தெரிவித்த தமிழ்நாடு அரசு,மின்வாரியத்திற்கு ஏற்கனவே 145 கோடி ரூபாய் அளவிலான இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 196 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.